LATEST NEWS
பெண் குழந்தை வச்சிருக்கீங்களா….? அப்போ உங்களுக்குத்தான் இந்த ரூ.3 லட்சம்… தமிழக அரசின் சூப்பர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!
பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசால் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000 வைப்புத் தொகையாகவும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வீதமும் அரசாங்கத்தால் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்தத் தொகையானது அக்குழந்தை 18 வயதை எட்டும்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் வட்டியுடன் சேர்த்துச் சுமார் 3 லட்சம் ரூபாயாக முதிர்வு பெற்று வழங்கப்படும். இது தவிர, பெண் குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆறாம் வகுப்பில் இருந்து ஆண்டுதோறும் ரூ.1,800 கல்வி உதவித்தொகையாகவும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறக் குடும்பத்தில் ஆண் வாரிசுகள் யாரும் இருக்கக் கூடாது மற்றும் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். பெற்றோர்கள் 40 வயதிற்குள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருப்பதுடன், குடும்பத்தின் வருட வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மேலும், குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
