CINEMA
அந்த ஒரு வசனத்துக்காக 4 நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்த இயக்குனர் கே பாக்யராஜ் – கடைசியில் அவர் ஓகே செய்த அந்த சூப்பர் வசனத்தை எழுதியது யார் தெரியுமா?
இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன். தாவணிக்கனவுகள் படத்தில் தனது சிஷ்யன் பார்த்திபனை சிவாஜி கணேசனுடன் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் குருநாதர் கே பாக்யராஜ். பிறகு தமிழ் சினிமாவில் பார்த்திபனும் டைரக்டர் நடிகர் தயாரிப்பாளர் என முன்னிலைக்கு வந்துவிட்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியதாவது, சின்னவீடு படத்தில் உடல் பருமனான மனைவி தன் கணவனிடம் பேசும் ஒரு டயலாக் திருப்தியாக அமையாததால் 4 நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்திருந்தார் பாக்யராஜ். நான் அப்போது உதவி இயக்குனராக இருந்த நான் சொன்ன ஒரு டயலாக் அவருக்கு பிடித்து போக பாக்யராஜ் உடனே அதை படமாக்கி விட்டார்.
அந்த வசனம் எது என்றால், மாமா நீங்க தோள்ல போடுற துண்டு மாதிரி ஒரு அழகான பொண்டாட்டியா நான் இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலில் மாட்டுகிற செருப்பு மாதிரி உபயோகமான ஒரு வேலைக்காரியா கூடவா நான் இருக்க மாட்டேன் என்று பார்த்திபன் எழுதிய அந்த வசனத்தை தான் கல்பனா தன்னிடம் பேசும் வசனமாக அவர் பயன்படுத்தி இருந்தார் என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.
