CINEMA
கோவாவில் நடந்த குஷ்பு மகள் திருமண விழாவில் பங்கேற்று திரும்பிய இயக்குனர் கே பாக்யராஜ் – அதுவே அவரது கடைசி விழாவாகி விட்டது – திரைக்கதை மன்னன் மறைவால் வாடும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் இயக்குனர் கே பாக்யராஜ். ஆரம்பத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக மாறினார். தனது படங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் சிறந்த ஆசிரியர் என்று புகழ் பெற்றவர்.
நேற்று முன்தினம் கோவாவில் நடந்த இயக்குனர் சுந்தர் சி – குஷ்பு மகள் அவந்திதா திருமண விழாவில் இயக்குனர் கே பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் பங்கேற்று விட்டு நேற்றிரவுதான் சென்னைக்கு திரும்பியுள்ளார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு பலத்த சோகத்தை தந்துள்ளது.
