CINEMA
ராஜமவுலி இயக்கத்தில் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் வாரணாசி படம்… படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? படம் திரைக்கு வருவது எப்போது? முக்கிய அப்டேட்டுகளை தந்த இயக்குனர்!
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் வாரணாசி. சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் வாரணாசி படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜமவுலி கூறியதாவது, வாரணாசி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி முடித்து நிறைவு செய்து விட்டோம். முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. தற்போது கதையை இணைக்கும் சின்ன சின்ன காட்சிகளை படமாக்கி வருகிறோம். அதனால் வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விடும் என்று இயக்குனர் ராஜமவுலி கூறி இருக்கிறார்.
வாரணாசி படம் வருகிற 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார். பாகுபலி ஆர்ஆர்ஆர் படங்களின் வரிசையில் வாரணாசி படமும் இயக்குனர் ராஜமௌலிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
