CINEMA
தயவு செய்து இப்படி பண்ணாதீங்க, உங்களுக்கு நடிச்சு வேணா தர்றோம், கொஞ்சமாவது எங்களுக்கு பிரைவசி கொடுங்க – கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத நடிகை ராதிகா சரத்குமார்!
இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜின் திடீர் மறைவால் தமிழ் சினிமா துறையினரும் ரசிகர்களும் பலத்த சோகத்தில் வேதனையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வாகனத்தில் இருந்து அவரை உடலை வெளியே கொண்டு வர முடியாமல் ஊடகங்களும் அங்கு இருந்த கூட்டமும் சுற்றி வளைத்துக்கொண்டது.
அப்போது வேனுக்குள் இருந்த நடிகை ராதிகா சரத்குமார் டென்சன் ஆகிவிட்டார். கே பாக்யராஜூடன் 3 படங்களில் நடித்தவர் ராதிகா. நல்ல நட்பு அவர்களுக்குள் இருந்த வந்த நிலையில் அவரது மறைவால் ராதிகா மிகவும் உடைந்து போயுள்ளார். இந்த சூழலில் கே பாக்யராஜின் உடலை வாகனத்தில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் ஊடகங்கள் தரப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அப்போது ராதிகா அங்கிருந்தவர்களை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது ராதிகா பேசுகையில், உங்களை கையெடுத்து கும்பிடுறேன். இங்கே வேண்டாம். உங்களுக்கு டிராமா வேண்டும் டிஆர்பி வேண்டுமென்றால் நாங்கள் தனியாக நடித்து தருகிறோம்.
தயவு செய்து எங்களுக்கு கொஞ்சம் பிரைவசி கொடுங்கள் சார். தயவு செய்து இந்த சாவினை சா்க்கஸ் ஆக்காதீங்க என்று கெஞ்சி கேட்டு இருக்கிறார். கடந்த முறை பாரதிராஜா மறைவின் போது ஊடகங்கள் அங்கு நடந்த சில குடும்ப விஷயங்களை பெரிதாக்கியது குறிப்பிடத்தக்கது.
