LATEST NEWS
நடுரோட்டில் ஓட்டுநரை காலால் உதைத்த போலீஸ் .. தட்டிக்கேட்ட நண்பர் செய்த மாஸ் காரியம்.. பயந்து தெறித்து ஓடிய காவலர்.. அதிர வைக்கும் பின்னணி..!!
வாரணாசியில் ராபிடோ பைக் ஓட்டுநர் ஒருவர், காவல் துறையினரால் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவரது மொபைல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓட்டுநர் காவலரின் மகளைத் தனது பைக்கில் ஏற்றிச் சென்றபோது, வழியில் ஒரு பார்சலை வாங்குவதற்காக அந்தப் பெண்ணிடம் முறையான அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்துத் தவறாகப் புரிந்துகொண்ட அந்த காவலர், ஓட்டுநரைத் தொலைபேசியில் அழைத்து அவரது தாயை ஆபாசமாக வசைபாடி நேரில் வருமாறு மிரட்டியுள்ளார். அதன்படியே ஓட்டுநர் அங்கு சென்றபோது, காவலர் அவரை நடுரோட்டில் காலால் உதைத்துத் தாக்கியதோடு, அவரது மொபைல் போனையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டார்.
இந்த அராஜகத்தைக் கண்டு ஓட்டுநரின் நண்பர் அங்கு வந்து காவலரைத் தட்டிக்கேட்டபோது, அந்த காவலர் பயமுறுத்தும் தொனியில் தங்களை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். உடனடியாக ஓட்டுநரின் நண்பர் இந்த முழுச் சம்பவத்தையும் தனது மொபைல் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கியதும், கேமராவைக் கண்டு பயந்த அந்த காவலர் ஓட்டுநரின் மொபைலைத் திருப்பித் தராமலேயே அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பின்னர் அந்த காவலர் மேலும் சில போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட அந்த ராபிடோ ஓட்டுநரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
