மகனை பறிகொடுத்த பாரதிராஜா கூட ஒரு வருஷம் தாக்கு பிடிச்சார், ஆனால் குருவை இழந்த பாக்யராஜ் ஒரு மாதம் கூட இருக்கலையே? – பிரபல நடிகர் வேதனை! – cinefeeds
Connect with us

CINEMA

மகனை பறிகொடுத்த பாரதிராஜா கூட ஒரு வருஷம் தாக்கு பிடிச்சார், ஆனால் குருவை இழந்த பாக்யராஜ் ஒரு மாதம் கூட இருக்கலையே? – பிரபல நடிகர் வேதனை!

Published

on

Director K Bhagyaraj

சென்னையில் இன்று காலை இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மாதம் 10ம் தேதி அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்த நிலையில் 17 நாட்களில் அவரது சீடர் கே பாக்யராஜூம் மறைந்து விட்டார். இது ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கே பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ராமராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இப்படி ஒரு திடீர் முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. பாக்யராஜ் மறைவை ஏற்கவே முடியவில்லை. பாரதிராஜா அவரது மகன் மனோஜ் இறந்தபிறகு ஒரு வருஷம் வரை தாக்கு பிடித்தார். ஆனால் தனது குருநாதர் மறைவுக்கு பின் ஒரு மாதம் கூட கே பாக்யராஜ் இருக்கவில்லை. அந்த அளவுக்கு குருவின் மறைவு அவருக்கு மன உளைச்சலை தந்திருக்கலாம் என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in