CINEMA
பல விஐபிகளுக்கு அழைப்பிதழ் வைத்தேன், ஆனால் நேரில் வந்தவர் கே பாக்யராஜ் ஒருவர் மட்டும்தான் – இயக்குனர் விக்ரமன் உருக்கம்!
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவரது முதல் படம் புது வசந்தம். முரளி சித்தாரா ஆனந்தபாபு சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகுதான் தொடர்ந்து விக்ரமன் பல வெற்றிப் படங்களை கொடுத்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, நான் இயக்கிய முதல் படம் புது வசந்தம் பட பூஜைக்கு பல விஐபிகளுக்கு பத்திரிக்கை வைத்து அழைத்தேன்.
ஆனால் பட பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த விஐபியும் வரவில்லை. அன்று வந்த ஒரே ஒரு விஐபி இயக்குனர் கே பாக்யராஜ் சார் மட்டும்தான். அவருக்கு அன்று அவசர போலீஸ் 100 படம் சூட்டிங் இருந்தது. ஆனாலும் நேரில் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்ததே இல்லை. அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர் கே பாக்யராஜ் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.
