LATEST NEWS
குஷியோ குஷி..! “இனி உங்க ஃபோன் நம்பர் யாருக்கும் தெரியாது” வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்… வரப்போகுது சூப்பர் வசதி..!!
வாட்ஸ்அப் செயலி, பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ‘யூசர்நேம்’ (Username) என்ற புதிய வசதியை அடுத்த சில மாதங்களில் உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை மற்றவர்களுடன் பகிராமலேயே, வெறும் யூசர்நேமை மட்டுமே பயன்படுத்தி மிக எளிதாக அரட்டை (Chat) செய்ய முடியும்.
இந்த புதிய வசதிக்கான முன்பதிவு தற்போதே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதில் கூடுதல் சிறப்பம்சமாக, பயனர்கள் தங்களுக்குத் தேவையான யூசர்நேமைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதுடன், அதை எப்போது வேண்டுமானாலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளவோ அல்லது முழுமையாக நீக்கவோ முடியும் என்ற சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண் தெரியாமல் யூசர்நேம் மூலமாகப் பேசினாலும், பாதுகாப்பு அம்சங்களில் எந்தக் குறைபாடும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல தேவையற்ற நபர்களைப் பிளாக் (Block) செய்யும் வசதியும், தவறான கணக்குகள் மீது ரிப்போர்ட் (Report) செய்யும் அம்சமும் இதிலும் தடையின்றிச் செயல்படும் என்பதால் பயனர்கள் தங்களின் கணக்குகளைப் பாதுகாப்பாகப் பராமரிக்க முடியும்.
