இவனுங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்களா..? தாயும், மகளும் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்கள்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீசார்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவனுங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்களா..? தாயும், மகளும் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்கள்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீசார்…!!

Published

on

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை, இரு நபர்கள் மறைந்திருந்து தங்களது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். அப்போது சிறுமி எதிர்பாராதவிதமாக இதைப் பார்த்துவிட்டு சத்தம் போடவே, அதிர்ச்சியடைந்த அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தீவிர விசாரணை நடத்திய வலங்கைமான் போலீசார், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான உத்தாணி கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை (30) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட இருவர் மீதும், மைனர் சிறுமி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு என்பதால், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இருவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in