செம ஷாக்கில் EPS..! அதிமுகவிலிருந்து தவெக-வுக்கு தாவும் முக்கிய புள்ளிகள்… இசக்கி சுப்பையாவைத் தொடர்ந்து அடுத்த விக்கெட்.. அதிரும் தமிழக அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம ஷாக்கில் EPS..! அதிமுகவிலிருந்து தவெக-வுக்கு தாவும் முக்கிய புள்ளிகள்… இசக்கி சுப்பையாவைத் தொடர்ந்து அடுத்த விக்கெட்.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!

Published

on

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தற்போது சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வரும் வியாழக்கிழமை அன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் இரு முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது கட்சியில் இணைவதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ரீதியாகப் பெரும் பலத்தைப் பெறவுள்ளது. இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in