LATEST NEWS
குட் நியூஸ்..! இனி பெட்ரோல் பங்குகளில் இந்த பிரச்சனை இருக்காது.. ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்..!!
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க, கடந்த ஜூன் 12-ஆம் தேதி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தற்காலிக விநியோகக் கட்டுப்பாடுகளை, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் இதுவரை இருந்த அனைத்து தடைகளும் நீக்கப்படுகின்றன. இனி நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி தாராளமாக கிடைக்கும் என்பதால், இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
