ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் திடீர் அனுமதி… என்னாச்சு அவருக்கு..? பெரும் பரபரப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் திடீர் அனுமதி… என்னாச்சு அவருக்கு..? பெரும் பரபரப்பு…!!

Published

on

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் வயது முதிர்வு மற்றும் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்பொழுது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தகவலறிந்த அவரது மகனும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் விரைந்தனர். அங்கு தயாளு அம்மாளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், அவரது தற்போதைய உடல் ஆரோக்கியம் குறித்தும் அங்குள்ள மருத்துவர்களிடம் அவர்கள் விரிவாகக் கேட்டறிந்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in