“நான் தான் கொன்றேன்” பாட்டியுடன் திண்ணையில் தூங்கிய சிறுமி… திடீரென காணாமல் போனதால் பதற்றம்… கிணற்றில் மீட்கப்பட்ட சடலம்… அத்தையின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் தான் கொன்றேன்” பாட்டியுடன் திண்ணையில் தூங்கிய சிறுமி… திடீரென காணாமல் போனதால் பதற்றம்… கிணற்றில் மீட்கப்பட்ட சடலம்… அத்தையின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி…!!

Published

on

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – கார்த்திகைசெல்வி தம்பதியின் மகள் சாய் தீப்தி, கோடை விடுமுறைக்காக ராமநாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் பாட்டியுடன் வீட்டின் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த அச்சிறுமி, ஜூன் 28 அதிகாலை திடீரென காணாமல் போனார். உறவினர்களும் போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், அருகில் இருந்த ஒரு வீட்டின் உறை கிணற்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் சொந்த அத்தையான சபரியா என்பவர் கைது செய்யப்பட்டார். தான் காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினர் தனது குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும், மாறாக கணவரின் அக்காள் மகளான சாய் தீப்தி மீது அதிக பாசம் காட்டியதால் தனக்கு கடுமையான பொறாமை ஏற்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement

இந்த ஆத்திரத்தின் காரணமாக, அதிகாலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், சிறுமியைத் தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் உயிருடன் வீசிக் கொன்றதாக சபரியா ஒப்புக்கொண்டுள்ளார். உறவினர்களுக்கு இடையேயான பொறாமை காரணமாக, சொந்த அத்தையே சிறுமியை கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in