LATEST NEWS
என் வேலையை பிடுங்கிட்டாங்க ஐயா… அங்க சாதிய பாகுபாடு இருக்கு… மீண்டும் வேலை கேட்டு மண்டியிட்டு கதறும் நடத்துனர்…!!
திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துநராகப் பணிபுரிந்து வந்த தம்பிதுரை என்பவர், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் கண்ணீர் மல்கக் கதறி அழுது பேட்டியளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “நெடுநாட்களாகப் பணியாற்றி வரும் நிலையில், திடீரெனப் பேருந்தை நிறுத்தி, தன்னிடம் இருந்த நடத்துநர் பையை பிடுங்கிக் கொண்டு, இனிமேல் வேலைக்கு வரக் கூடாது எனக் கூறி நடுவழியில் இறக்கிவிட்டனர்” என்று கூறினார். மேலும், நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடுமையான சாதியப் பாகுபாடு நிலவுவதாகவும், அதன் காரணமாகவே கடந்த ஜூன் 19ஆம் தேதி எவ்விதக் காரணமுமின்றி தான் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
#NewsReporting | "நடுரோட்டில் வேலை இல்லனு இறக்கி விட்டுட்டாங்க.." கதறி அழுத தற்காலிக நடத்துனர்!
Nellai | Collector | TemporaryConductor #Newstamil24x7 #Conductor pic.twitter.com/Vzycci21u7
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 29, 2026
வேலையிழந்ததால் தனது குடும்பம் சாப்பாட்டிற்கே வழியின்றி தவிப்பதாகவும், குழந்தைகளுக்குக் கஞ்சித் தண்ணீரைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை நினைத்துத் தாங்க முடியாமல் கதறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மீண்டும் தற்காலிக நடத்துநர் பணியை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் தனக்குத் தூய்மைப் பணி தருவதாகக் கூறுவதாகவும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்துள்ளார்.
