LATEST NEWS
இது கல்லூரியா? இல்ல கட்சி ஆபீஸா?ஒரு நடனத்தால் வந்த வினை..!மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தவெக அமைச்சர்..வைரலாகும் வீடியோ..!!
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றார். அந்த விழாவின் போது, கல்லூரி முதல்வர் அறைக்கு முன்பாக தவெக கட்சியின் கொடி வைக்கப்பட்டிருந்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் கட்சி சின்னங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை உள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறி கல்லூரி வளாகத்தில் கட்சி கொடி இடம்பெற்றது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
முன்னதாக, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் விஸ்வநாதன் சினிமா பாடலுக்கு நடனமாடிய விவகாரம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, தற்போது கல்லூரி நிகழ்ச்சியில் தவெக கொடி இடம்பெற்றிருப்பது மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. கல்வி நிலையங்களில் அரசியல் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
