CINEMA
தனது மகன் அப்படிப்பட்டவன் இல்லை… தனது மூத்த மகன் ஆரவ்வின் 16-வது பிறந்தநாளை முன்னிட்டு… ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் போஸ்ட்..!!!
நடிகர் ஜெயம் ரவியைப் பிரிந்து தற்போது தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வரும் ஆர்த்தி ரவி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். கடந்த ஆண்டு ஜெயம் ரவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது முதல் அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக அவ்வப்போது சில பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
தற்போது, ஆர்த்தி ரவி தனது மூத்த மகன் ஆரவ்வின் 16-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார். இந்தத் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு மற்றும் அதனுடன் அவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வேகமாக வைரலாகி வருகின்றன.
https://www.instagram.com/p/DaLR8_NGdD9/?utm_source=ig_web_button_share_sheet
அந்தப் பதிவில் தனது மகன் ஆரவ் மிகவும் அமைதியான, பொறுமையான மற்றும் நல்ல குணம் கொண்ட பையன் என்று ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஆண் பிள்ளைகள் வளர வளரப் பெற்றோரை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள் என்றும், அவர்களின் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்றும் பலர் சொல்வார்கள், ஆனால் தனது மகன் அப்படிப்பட்டவன் இல்லை என்று நெகிழ்ச்சியோடு கூறி, தன் மகனைப் பாராட்டி இந்த வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.
