LATEST NEWS
மைதானத்தில் எம்பாப்பே முகத்தில் விசித்திர குறியீடு..? உலகக் கோப்பையில் பரபரப்பை கிளப்பிய ‘வூடு’ பில்லி சூனிய வதந்தி.. வைரலாகும் பகீர் பின்னணி..!!
2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும் கேப்டனுமான கிளியன் எம்பாப்பேயின் முகத்தில் உள்ள விசித்திரமான தழும்புகள் மற்றும் அடையாளங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. போட்டி களத்தில் எடுக்கப்பட்ட அவரது அண்மைப் புகைப்படங்களை உற்று நோக்கிய ரசிகர்கள், அவரது முகத்தில் ஏதோ சில குறியீடுகள் போல தழும்புகள் இருப்பதாகக் கூறி அதனை வைரலாக்கி வருகின்றனர்.
விளையாட்டு ரசிகர்களிடையே இந்தத் தழும்புகள் விசித்திரமான கற்பனைகளையும் வதந்திகளையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக, எம்பாப்பேயின் இந்த முக அடையாளங்கள் ஏதோ “வூடு” (Voodoo) எனப்படும் பில்லி சூனியம் அல்லது ஆப்பிரிக்கப் பாரம்பரிய பில்லி சூனிய வழிபாட்டு முறைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சிலர் விசித்திரமான கருத்துக்களைப் பகிர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகின்றனர்.
இருப்பினும், இந்த வூடு வதந்திகளுக்குப் பின்னால் எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்று கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிரமான போட்டிகளின் போது ஏற்படும் சிறு காயங்கள், கீறல்கள் அல்லது முகமூடி அணிந்ததால் ஏற்பட்ட தழும்புகளாக இவை இருக்கலாம் என்றும், மைதானத்தில் அவரது சிறப்பான ஆட்டத்தைக் திசைதிருப்பவே இதுபோன்ற விசித்திரமான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
