LATEST NEWS
தவெகவில் இணைந்தது இதற்காகத்தான்… உண்மையை போட்டுடைத்த சி.விஜயபாஸ்கர்.. செம கடுப்பில் எடப்பாடி..!!
அதிமுகவின் தலைமையில் இருக்கும் ஒருவரின் தவறான முடிவுகளின் காரணமாகவே தான் மாற்று கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 2) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட நிர்வாகிகளும் தற்போது மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காகக் காலை முதலே திரண்டு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் நிலவும் அதிருப்தி காரணமாக இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்து வரும் சூழலில், இன்னும் சற்றுநேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளனர். தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி நகர்வு, அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
