LATEST NEWS
தவெக ஆட்சியை கவிழ்க்க கோடிகள் வீசும் திமுக..? எம்.எல்.ஏ-க்களை விலை பேசும் குதிரை பேரம்.. அதான் ஸ்டாலின் அபப்டி சொல்லியிருக்காரு… சண்முகம் வைத்த அதிரடி வெடி..!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியைப் பின்திரையிலிருந்து கவிழ்க்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், குறுக்கு வழியில் தவெக ஆட்சியை வீழ்த்துவதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களை கோடிக்கணக்கில் விலை பேசி வாங்க திமுகவினர் முயன்று வருவதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
திமுகவின் இந்த ரகசிய பேரங்களின் காரணமாகவே, தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாக சண்முகம் சுட்டிக்காட்டினார். ஜனநாயகத்திற்குப் புறம்பாக தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் பேசி, ஆட்சியைத் கலைக்கத் துடிக்கும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
