கண்களை நம்ப முடியாத அதிர்ச்சி..! பெண் எம்பி வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்… தங்க முலாம் பூசிய உள்ளாடைகளைக் கண்டு உறைந்து நின்ற அதிகாரிகள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்களை நம்ப முடியாத அதிர்ச்சி..! பெண் எம்பி வீட்டில் கிலோ கணக்கில் தங்கம்… தங்க முலாம் பூசிய உள்ளாடைகளைக் கண்டு உறைந்து நின்ற அதிகாரிகள்..!!!

Published

on

ஈராக் நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல் அப்பாஸி என்பவரது வீட்டில் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு சேவைப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 16.5 பில்லியன் ரொக்கப்பணம், 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பெண் எம்பியின் வீட்டில் இவ்வளவு பெரிய தொகையும், விசித்திரமான முறையில் தங்க உள்ளாடைகளும் கண்டெடுக்கப்பட்டது சோதனையிட சென்ற அதிகாரிகளையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈராக்கில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் இணைந்து மிகப்பெரிய அளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமர் அலி அல் சைதி இந்த ஊழல்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், நாடு தழுவிய அளவில் ஊழல் சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் இல்லங்களில் அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

Advertisement

இந்த அதிரடி சோதனைகளின் முடிவில், முறையான வருமான ஆதாரங்களைக் காட்டாத 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 40 அரசு அதிகாரிகள் உட்பட மொத்தம் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வீடுகளில் இருந்து ஒட்டுமொத்தமாக சுமார் 82.5 பில்லியன் பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in