LATEST NEWS
ஆவேசமாக பேசிய தவெக அமைச்சர் … கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்…! முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜூனா ஓபல் சவால்…!அதிமுக பேப்பர் அளவில் இயங்கும் ஒரு கட்சியாக மாறும் என்றும் சூளுரைத்தார்..!!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் விழாவில் பேசிய அக்கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நிலவிய 75 ஆண்டுகால பண அரசியலை முறியடித்து த.வெ.க. ஆட்சியமைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் 90 சதவீதத்தினர் த.வெ.க.வில் இணைவார்கள் என்றும், இனி அதிமுக பேப்பர் அளவில் மட்டுமே இயங்கும் ஒரு கட்சியாக மாறும் என்றும் சூளுரைத்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான மே 4-ஆம் தேதி இரவு முதலே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதித்தவர்களுடன், எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக கூட்டணி பேசினார் என்றும், துரோகம் மற்றும் சூழ்ச்சியின் காரணமாக இனி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் மட்டுமே எஞ்சுவார்கள் என்றும் அவர் சாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாகச் சாடிய ஆதவ் அர்ஜூனா, உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்காக கரூரில் காவல்துறையைப் பயன்படுத்தி தங்களது மக்களைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டினார். “கரூரில் எங்களுக்கு என்று ஒரு கணக்கு வழக்கு உள்ளது; கரூரின் அந்தப் பிரச்சினையை முடிக்காமல் நாங்கள் ஓயமாட்டோம், அதை அப்படியே விட்டுவிட மாட்டோம்” என்று அவர் மிகவும் ஆவேசமாகப் பேசினார்.
