LATEST NEWS
இதுதான் டுவிஸ்ட்..! TVK வும் இல்ல DMK வும் இல்ல பாஜகவுக்கு தாவும் வேலுமணி..? அதிமுகவில் கிளம்பிய அடுத்த புயல்…!!
அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான எஸ். பி. வேலுமணி, பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வரும் அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இயக்கத்தின் கீழ் செயல்படலாமா என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் பிளான் போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, எஸ்பி வேலுமணி விரைவில் முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய சூழலில் அவர் திடீரென பாஜக பக்கம் தனது கவனத்தைத் திருப்பியிருப்பது தவெக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தவெக-வை விட பாஜக-வில் இணைந்தால் மட்டுமே தனக்கு அரசியல் ரீதியாக அதிகச் சாதகங்கள் மற்றும் பாதுகாப்பு இருக்கும் என்று எஸ்பிவி கணக்கு போடுவதாகத் தெரிகிறது.
கொங்கு மண்டலத்தில் மிக வலுவான வாக்கு வங்கியையும் அஸ்திவாரத்தையும் கொண்டுள்ள பாஜக-வுடன் கைகோர்ப்பதே தனது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு பகுதியில் செல்வாக்கு மிக்க எஸ்பி வேலுமணி பாஜகவிற்குச் சென்றால், அது அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்பதால் தமிழக அரசியலில் இந்த நகர்வு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
