பெல்ட், ஷூ, டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரத் தடை… ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிரடி கெடுபிடி… கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தேர்வு வாரியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெல்ட், ஷூ, டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரத் தடை… ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிரடி கெடுபிடி… கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தேர்வு வாரியம்..!!

Published

on

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. இத்தேர்வை முறைகேடுகள் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தேர்வர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தேர்வு எழுத வரும் ஆசிரியர்கள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ் மற்றும் டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்டவற்றை அணிந்து வரத் தேர்வு வாரியம் முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாக, தேர்வு அறைக்குள் செல்போன், புளூடூத் கருவிகள், மைக்ரோபோன் உள்ளிட்ட எந்தவிதமான எலெக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய சார்ந்த தேர்வு மையங்களுக்குக் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வருகை புரிய வேண்டும் என்றும், 9.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in