குஷியோ குஷி..! கடன் முழுமையாக தள்ளுபடி…? காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! கடன் முழுமையாக தள்ளுபடி…? காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி..!!

Published

on

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பாகத் தவெக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் காலையிலேயே மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடன் தள்ளுபடி தொடர்பாகப் பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் இந்த முக்கியமான கோரிக்கை குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் விரிவாக ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே தவெக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.75,000 வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது முழு கடனையும் தள்ளுபடி செய்வதற்கான சாதக பாதகங்கள் மற்றும் நிதிநிலை குறித்து அரசு மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த முழு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானால், அது தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்குப் மிகப்பெரிய பொருளாதாரப் பெருமூச்சாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in