LATEST NEWS
BIG NEWS: பொங்கல் பரிசு பெற இது கட்டாயம்… தமிழக மக்களுக்கு CM விஜய்யின் முக்கிய அறிவிப்பு..!!
2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்குப் புதிய ரக இலவச வேட்டி, சேலைகளை வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை பார்டர் கொண்ட பிரீமியம் ரக ஆடைகளை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக முதற்கட்டமாக ரூ. 300 கோடியை ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 642.88 கோடி செலவில் சுமார் 2.27 கோடி சேலைகளும், 2.25 கோடி வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த விலையில்லா பொருள்கள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் முறைகேடின்றி, தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், ரேஷன் கடைகளில் விநியோகத்தின் போது விரல் ரேகை பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டையில் உள்ள பயனாளிகளில் இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத பொதுமக்கள், உடனடியாகத் தங்களின் விபரங்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த புதிய நடைமுறை, பொங்கல் பரிசு விநியோகத்தை முழுமையாக முறைப்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
