LATEST NEWS
எரியுற நெருப்புல எண்ணெய் ஊத்துறாரே..! “ஈரானை வச்சு செஞ்சிட்டோம்” இப்போ சமரசத்திற்கு துடிக்கிறாங்க… கமேனி இறுதிச்சடங்கு நாளில் டிரம்ப் அதிரடி பேச்சு..!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது 6 நாள் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதலில் இரு நாடுகளும் நடத்திய பயங்கர தாக்குதலில் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். கடுமையான போர் பதற்றம் காரணமாக கடந்த 4 மாதங்களாக தள்ளிவைக்கப்பட்டிருந்த இறுதிச் சடங்கு, தற்போது ஏற்பட்டுள்ள 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து தலைநகர் தெஹ்ரானில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் நடைபெற்று வருகிறது.
ஈரானில் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “நாங்கள் வெனிசுலாவை ஒரே நாளில் வீழ்த்தினோம், ஈரானையும் மிகக் கடுமையாகத் தாக்கினோம்; தற்போது அவர்கள் எப்படியாவது எங்களுடன் சமரசம் செய்துகொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் நல்லவர்கள் என்பதால் ஈரானுக்கு இறுதிச் சடங்கை நடத்த ஒரு வாரம் அவகாசம் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, பிப்ரவரி மாத தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் அயதுல்லா அலி கமேனியின் மகனின் நிலை குறித்த மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. அவர் இதுவரை பொது வெளியில் எங்கும் தோன்றாத நிலையில், தனது தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது
