LATEST NEWS
“விஜய் தான் முதல்ல ஆரம்பிச்சாரு” அடுத்து உதயநிதி… அனிதா ராதாகிருஷ்ணன் ‘த்ரிஷா வீட்டில் விஜய்’ எனப் பேசியதன் பின்னணி பகிரங்க அம்பலம்..
தமிழக அரசியல் வட்டாரத்தில் விஜய் மற்றும் திமுக இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த அரசியல் பிரச்சனை தனிமனித தாக்குதலில் இருந்துதான் தொடங்கியது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கைக்கு தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் தொடக்கப்புள்ளி என்று திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். முன்னதாக பொதுமேடையில் “அப்பாவை காணோம்” என விஜய் பேச, அதற்குப் பதிலாக “நீதிமன்றத்தில் கணவனைத் தேடும் மனைவி” என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்ததே இந்த இருதரப்பு தனிமனித தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்தது.
முன்னணித் தலைவர்களே இவ்வாறு நேரடியாகத் தங்களைத் தாக்கிக் கொண்டதால், தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுவெளியில் எல்லை மீறத் தொடங்கினர் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதன் வெளிப்பாடாகவே, தங்களது தலைவரே பேசிவிட்டதால் நாமும் பேசலாம் என்ற நோக்கில், ‘த்ரிஷா வீட்டில் விஜய்’ என அனிதா ராதாகிருஷ்ணன் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தனிப்பட்ட மோதல்கள் தற்போது இரு தரப்பிற்கும் இடையிலான அரசியல் யுத்தமாக உருவெடுத்துள்ளது.
