“என்னைத் தொட்டால் நீ செத்த” நான் யார் தெரியுமா…? முதலிரவு அறையில் கணவனுக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னைத் தொட்டால் நீ செத்த” நான் யார் தெரியுமா…? முதலிரவு அறையில் கணவனுக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபர் மாவட்டத்தில், ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி ஹாபூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், மீரட்டைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களால் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலிரவு அறையில் மணமகன் நுழைந்தபோது, மணப்பெண் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

“என்னைத் தொடக்கூடக் கூடாது, நான் வேறொருவரின் சொத்து” என்று கூறிய அந்தப் பெண், தன்னை வற்புறுத்தினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதோடு, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையிலேயே தொடர்ந்து தனது காதலனுடன் போனில் பேசியுள்ளார். இது குறித்து மணமகன் தரப்பில் பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டும், அவர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளனர். இதனால், தனது உயிருக்கும் குடும்பப் பாதுகாப்பிற்கும் பயந்த கணவர், திருமணமான மூன்றே நாட்களில் (ஜூன் 28) மனைவியின் காதலனை நேரில் வரவழைத்து, தனது மனைவியை அவருடன் ஆளுயர மரியாதையுடன் அனுப்பி வைத்துள்ளார்.

Advertisement

காதலனுடன் மனைவி சென்ற பிறகு, எதிர்காலத்தில் எந்தவொரு பொய் வழக்கோ அல்லது சட்ட ரீதியான சிக்கலோ வந்துவிடக் கூடாது என்பதில் கணவரின் குடும்பத்தினர் விழிப்புடன் செயல்பட்டனர். இதற்காக ஹாபூர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று, நடந்த சம்பவங்களை விளக்கிப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அருணா ராய் இது குறித்துப் பேசுகையில், இரு தரப்பினரின் சம்மதத்தோடும், அமைதியான முறையிலும் இந்த விவகாரம் பேசித் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in