LATEST NEWS
BIGBREAKING: திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார் முக்கிய புள்ளி.. பயங்கர அதிர்ச்சியில் ஸ்டாலின்..!
திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தவெக அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் காயத்ரி தவெகவில் இணைந்த நிலையில், தற்போது மற்றொரு முக்கிய எம்பியின் மகனும் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார்.
அடுத்தடுத்து திமுகவின் முன்னணித் தலைவர்களின் வாரிசுகள் மாற்றுக்கட்சியான தவெகவை நோக்கிப் படையெடுப்பது, திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிரமாகத் தயாராகி வரும் வேளையில், சந்தீப் ஆனந்தின் இந்த அதிரடி அரசியல் நகர்வு அக்கட்சிக்குக் கூடுதல் பலத்தை அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
