LATEST NEWS
அதிமுகவிற்கு அடுத்த அதிர்ச்சி…! தொடர்ந்து பயணிக்க இயலாது.. இ.பி.எஸ்-க்கு கடிதம் அனுப்பி விலகிய முன்னாள் எம்.எல்.ஏ..!!
அதிமுகவிலிருந்து மேலும் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விலகியுள்ளார். கூடலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பொன் ஜெயசீலன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகக் குறிப்பிட்டு, அதிமுகவின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ் அவர்களுக்குத் தனது விலகல் கடிதத்தை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் தொடர்ந்து பயணிக்க இயலாத ஒரு சூழல் நிலவுவதே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும், இம்முறை நடைபெற்ற தேர்தலில் அவர் 22,833 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
