LATEST NEWS
“யாருடா இவன்… லேசா மிஸ் ஆகியிருந்தாலும் சோலி முடிஞ்சிருக்கும்..! லைக்ஸ்க்காக உயிரைப் பணயம் வச்ச ‘ஸ்டண்ட் மாஸ்டர்’..!!”
சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணைப் பின்னால் அமரவைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் வளைந்து நெளிந்து ஸ்டண்ட் செய்யும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக @Vibhasumahi என்ற X பயனர் பதிவிட்ட இந்த வீடியோ, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்ததோடு பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவின் தொடக்கத்தில் இயல்பாகச் செல்லும் அந்தப் பயணி, சில நொடிகளிலேயே பைக்கை அதிவேகத்தில் இருபுறமும் திருப்பி ஆபத்தான முறையில் இயக்கத் தொடங்குகிறார். இதனால் பின்னால் அமர்ந்திருக்கும் பெண் பலமுறை தடுமாறி, பைக்கிலிருந்து கீழே விழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். பெண்ணின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தபோதிலும், பைக் ஓட்டுபவர் அதைப் பொருட்படுத்தாமல் தனது ஆபத்தான சாகசத்தைத் தொடர்கிறார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெறும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகத் தங்களுடைய மற்றும் பிறரின் உயிரைப் பணயம் வைப்பது முற்றிலும் தவறான செயல் என்றும், இதுபோன்ற ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
