LATEST NEWS
BREAKING: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக வில் இணைந்தார் பிரபல நடிகர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான ரவி மரியா தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், கட்சியின் பொதுச் செயலாளரும், தவெகவின் முக்கிய நிர்வாகியுமான என். ஆனந்த் முன்னிலையில் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். அதிமுகவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டு வந்த ரவி மரியா, தற்போதைய அரசியல் சூழலில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அதேபோல், திமுகவில் இருந்து விலகிய பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜே.எம். பஷீரும் இன்று தவெக பொதுச் செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், வாரிசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து பனையூர் அலுவலகத்திற்கு வந்து தவெகவில் இணைந்து வருவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தவெகவில் புதிய உறுப்பினர்களாக இணைந்த ரவி மரியா மற்றும் ஜே.எம். பஷீர் ஆகிய இருவருக்கும் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
