LATEST NEWS
குடிநீரில் என்னத்த கலந்த.? கேமராவில் சிக்கிய ரகசியம்… பியூட்டி பார்லர் ஓனரை 6 நிமிடத்தில் 43 செருப்படி அடித்த பெண் ஊழியர்கள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!!
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் நான்கு பெண் ஊழியர்கள், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அந்த பார்லரில் வேலை செய்து வந்துள்ளனர். வழக்கமாக கணக்கு வழக்குகளைப் பார்க்க மட்டுமே வரும் அந்த பார்லரின் உரிமையாளரான பவானி சங்கர் கத்ரி, சமீபகாலமாக பார்லருக்குள் அடிக்கடி நுழையத் தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் 27 அன்று, அவர் தங்களின் குடிநீரில் ஏதோ ஒரு மயக்கப் பொருளைக் கலப்பதாக பெண் ஊழியர்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்போது அதற்கான போதிய ஆதாரம் அவர்களிடம் இல்லை.
தங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய பெண் ஊழியர்கள், ஜூன் 29 அன்று தங்களின் மொபைல் போன் கேமராவை ரகசியமாக ஆன் செய்து பார்லருக்குள் மறைத்து வைத்தனர். அதில், உரிமையாளர் பவானி சங்கர் ஊழியர்களின் குடிநீரில் ஏதோ ஒரு மர்மப் பொருளைக் கலப்பது தெளிவாகப் பதிவாகியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நான்கு பெண் ஊழியர்களும், தங்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்ததுடன், அந்த உரிமையாளரைச் சூழ்ந்து கொண்டு தர்மஅடி கொடுத்தனர். சுமார் 6 நிமிடங்களில் தங்களின் செருப்புகளால் 43 முறை அந்த உரிமையாளரை அவர்கள் சரமாரியாக அடித்து வெளுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DaU_x2lCnZ5/?utm_source=ig_embed&ig_rid=AFs_VijobX5RwrHPRQLssUW
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் ராஜ்கர் காவல் நிலையத்தில் பார்லர் உரிமையாளருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி, குற்றவாளி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். இதற்கிடையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள உரிமையாளர் பவானி சங்கர், “கடந்த சில நாட்களாக பார்லரில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை. அதனால் ஆன்மீக மற்றும் ஜோதிடக் காரணங்களுக்காக பார்லரில் மஞ்சள் கடுகுத் தூவியதுடன், குடிநீரில் புனிதமான கங்கா தீர்த்தத்தை மட்டுமே கலந்தேன்” என்று வினோதமான விளக்கமளித்துள்ளார். போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
