LATEST NEWS
இங்கே இவ்வளவு விஷயம் நடக்குது… ஆளுநர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு..? குதிரை பேர விவகாரத்தில் அதிமுக எம்பி இன்பதுரை ஓப்பனாக கேள்வி..!!
“குதிரை பேரம் நடப்பது அப்பட்டமாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என அதிமுக எம்பி இன்பதுரை மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழலில் தற்போது நடைபெற்று வரும் குதிரை பேர விவகாரத்தை ஆளுநர் கண்டும் காணாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக நடக்கும் இந்தச் செயல்களை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, “அரசியலில் குதிரை பேரத்தை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று ஆளுநர் உறுதியாகக் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய சூழலில் குதிரை பேரம் அப்பட்டமாக அரங்கேறி வரும் நிலையிலும், ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
