அமெரிக்காவுக்கு வீழ்ச்சி… பழிக்குப்பழி வாங்குவோம்…! கமேனியின் இறுதிச்சடங்கில் கொதித்தெழுந்த ஈரான் மக்கள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமெரிக்காவுக்கு வீழ்ச்சி… பழிக்குப்பழி வாங்குவோம்…! கமேனியின் இறுதிச்சடங்கில் கொதித்தெழுந்த ஈரான் மக்கள்..!!!

Published

on

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் தலைநகர் தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற தாக்குதலில் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட நிலையில், தற்போதைய தற்காலிகப் போர் நிறுத்தச் சூழலுக்கு இடையே இந்த இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரம்மாண்ட கிராண்ட் மொசல்லா மைதானத்தில் கமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. கருப்பு உடைகளை அணிந்து வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள், தங்களின் பாரம்பரிய வழக்கப்படி மார்பில் அடித்துக்கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுடன், அதே தாக்குதலில் பலியான அவரது குடும்பத்தினரின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பொதுமக்கள் மிகக் கடுமையான கோஷங்களை எழுப்பினர். “பழிக்குப் பழி” வாங்க வேண்டும் என முழக்கமிட்டதுடன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினமான ஜூலை 4 அன்று இந்த இறுதிச்சடங்கு தொடங்கப்பட்டதால், “அமெரிக்காவிற்கு வீழ்ச்சி” என்ற முழக்கங்கள் மைதானம் முழுவதும் எதிரொலித்தன. ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தாபா கமேனி பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த இறுதிச்சடங்கு நிகழ்வு ஈரானில் பெரும் அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in