LATEST NEWS
BREAKING : இலங்கை சிறையில் கலவரம்.. 25 பேர் உயிரிழப்பு.. சற்றுமுன் அதிர்ச்சி..!!
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தற்பொழுது பெரும் கலவரமாக வெடித்துள்ளது . சிறையிலுள்ள இரு குழுக்களுக்கு இடையே நேற்று தொடங்கிய இந்த மோதல், இன்று மேலும் வலுப்பெற்று பெரும் வன்முறையாக மாறியுள்ளது . இந்தத் துரதிர்ஷ்டவசமான கலவரத்தில் 2 காவல் அதிகாரிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்தக் கொடூர வன்முறைச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்பொழுது தீவிர மருத்துவச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . சிறைக்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து, அங்கு பதற்றத்தைத் தணிக்கக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இதற்கிடையே, கலவரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் சிறைச்சாலைக்கு முன்பாகத் திரண்டுள்ளதால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது
