“நாம ஏன் தோத்துப்போனோம்..?” சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிச்சாமி… அதிமுகவில் அதிரடி திருப்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாம ஏன் தோத்துப்போனோம்..?” சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிச்சாமி… அதிமுகவில் அதிரடி திருப்பம்..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் அடுத்தகட்ட பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள், நிர்வாகிகளின் செயல்பாடு மற்றும் வாக்குகள் சரிந்ததற்கான பின்னணி உள்ளிட்ட விவரங்களை இந்த கூட்டத்தில் அவர் கேட்டறிகிறார்.

மேலும், வரும் எதிர்கால தேர்தல்களை எதிர்கொள்வதற்கான புதிய வியூகங்கள் மற்றும் கட்சியை அடிமட்டம் வரை பலப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வதே இந்தத் தொடர் ஆலோசனைக் கூட்டங்களின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in