LATEST NEWS
மனைவி பிரிந்த ஆத்திரம்?போதை தலைக்கேறிய மகனின் விபரீத செயல்..தாய்க்கு நேர்ந்த கொடுமை..வசமாக சிக்கிய வாலிபர் கைது…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவரை இழந்த மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகனான மாரிச்செல்வம் என்ற கட்டிட தொழிலாளி, தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவியால் கைவிடப்பட்டு, கோவையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி ஊர் திரும்பிய மாரிச்செல்வம், சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் அதீத மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது எவ்வித காரணமும் இன்றி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை மிகக் கொடூரமாக தாக்கி, மனிதநேயமற்ற முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கோரத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த மூதாட்டி, உறவினர்களின் உதவியோடு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அளித்த அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, மாரிச்செல்வத்தை கைது செய்தனர். பெற்ற தாயையே போதை மயக்கத்தில் சீரழித்த மகனின் இந்த மிருகத்தனமான செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களையும் எழுப்பியுள்ளது
