LATEST NEWS
திருமா ‘நோபல்’ பரிசுக்கு தகுதியானவர்.. ஆனால் உங்களை போல “ஏமாற்றுப்பேர்வழி இல்லை” வைகோவின் கிண்டலுக்கு விசிக பாலாஜி பதிலடி..!!
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பங்கேற்றிருந்தாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவேன் என்றும், அதைத் தவிர்க்க மாட்டேன் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்தக் கருத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய வைகோ, “திருமாவளவனின் இந்தக் கருத்துக்காக அவருக்கு நோபல் பரிசே வழங்கலாம்” என்று மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.
வைகோவின் இந்தக் கிண்டல் பேச்சுக்கு விசிக தரப்பில் இருந்து தற்பொழுது கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. வைகோவின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய விசிக முன்னாள் எம்.எல்.ஏவும், கட்சியின் பொருளாளருமான எஸ்.எஸ்.பாலாஜி, தங்கள் தலைவர் திருமாவளவன் கண்டிப்பாக ‘நோபல்’ பரிசுக்குத் தகுதியானவர் தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஒருபோதும் மக்களை ஏமாற்றும் ‘கோயபல்ஸ்’ ஆக மாற மாட்டார் என்று வைகோவைச் சாடிப் பேசியுள்ளார்.
