LATEST NEWS
“இப்படியொரு பேரன் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்!”.. 80 வயது தாத்தா ஆசைக்காக ரூ.12 லட்சத்தை வாரி இறைத்த 21 வயது இளைஞன்.. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் நடந்த ‘அந்த’ அதிசயம்..!!
சொந்த வீடு வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ₹12 லட்சத்தை செலவழித்து, ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரைக் காண்பதற்காகத் தனது 80 வயது தாத்தாவை ஜெேக்சப் என்ற 21 வயது இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். சிறுவயதில் தனக்காகப் பல தியாகங்களையும் செலவுகளையும் செய்த தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றவே இந்த நெகிழ்ச்சியான முடிவை எடுத்ததாக ஜேக்சப் தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த அன்புப் பயணம் தொடர்பான பதிவு இணையத்தில் வெளியாகிப் பலரது கவனத்தை ஈர்த்து, வைரலாகப் பரவி வருகிறது.
இணையத்தில் வைரலான ஜேக்சப்பின் இந்த நெகிழ்ச்சியூட்டும் பதிவைக் கண்ட அமெரிக்காவைச் சேர்ந்த ‘Metawin’ என்ற நிறுவனம் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்காக அவர்கள் செலவழித்த முழுத் தொகையையும் அந்த நிறுவனமே அவர்களுக்குத் திரும்பத் தருவதாக உறுதி அளித்துள்ளது. இதன் மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தாத்தாவின் உலகக் கோப்பை ஆசையையும் நிறைவேற்றி, சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்புத் தொகையையும் அவர்கள் மீண்டும் பெற்றுள்ளனர்.
