LATEST NEWS
FLASH: ஒரே நாளில் 2 முறை சரிந்த தங்கம் விலை.. மாலையில் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து… மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
சென்னையில் தங்கம் விலை மீண்டும் கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய அறிவிப்பின்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,05,600 ஆகவும், ஒரு கிராம் ரூ.13,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்திருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி மேலும் சரிந்து சவரனுக்கு மொத்தம் ரூ.1,040 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் தொடர் சரிவு நகை பிரியர்கள் மற்றும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்குவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
