LATEST NEWS
யமன் வந்து தோற்ற கதை..! சக்கரங்களுக்குள் சிக்கிய பெண்… நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சிப் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ஏறி இறங்கிய அதிர்ச்சியூட்டும் விபத்து அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்குச் செல்ல முயன்றபோது, அதிவேகமாக வந்த ஒரு கனரக லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தின் கொடூரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது.
லாரி மோதிய வேகத்தில் அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அடுத்த சில நொடிகளில் அந்த ராட்சத லாரியின் சக்கரங்கள் அவரது உடலின் மீது ஏறி இறங்கின. பொதுவாக இதுபோன்ற விபத்துகளில் சிக்கித் தப்புவது மிகவும் கடினம் என்ற நிலையில், அந்தப் பெண் லாரியின் சக்கரங்களுக்கு இடையே இருந்த இடைவெளியால் மிகக் கொடூரமான பாதிப்பில் இருந்து நல்வாய்ப்பாகத் தப்பினார். லாரி கடந்து சென்ற உடனேயே, அவர் எவ்வித பெரிய காயமுமின்றி தானாகவே எழுந்து நின்ற அதிசய நிகழ்வு அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக ஓடிவந்து அந்தப் பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் சக்கரங்கள் ஏறிய போதிலும், அவர் அற்புதாமாக உயிர் பிழைத்ததோடு ஆபத்தான காயங்கள் ஏதுமின்றி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
