அடேங்கப்பா.. மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.. யாருகெல்லாம் தகுதி தெரியுமா?.. தமிழக அரசு வெளியிட்ட செம குட் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.. மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.. யாருகெல்லாம் தகுதி தெரியுமா?.. தமிழக அரசு வெளியிட்ட செம குட் நியூஸ்..!!

Published

on

  • தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பழனி முருகன் கோயிலில், நடப்பு ஆண்டிற்கான பல்வேறு பாரம்பரியப் பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அர்ச்சகர் மற்றும் ஓதுவார் படிப்புகளுக்கு 14-24 வயதினரும், வேத சிவாகமம் மற்றும் தவில் இசைப் படிப்புகளுக்கு 12-16 வயதினரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 5 அல்லது 8-ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்குப் பயிற்சி காலம் முடியும் வரை, முழு நேரப் பயிற்சிக்கு மாதந்தோறும் ரூ.10,000 மற்றும் பகுதி நேரப் பயிற்சிக்கு ₹5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
  • இதுதவிர, மாணவர்களின் பயிற்சி காலத்தின் போது அவர்களுக்கான உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் முற்றிலும் கட்டணமில்லாமல் இலவசமாகவே வழங்கப்படும். இப்பயிற்சிகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் palanimurugan.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 6383031350 மற்றும் 9942111960 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in