LATEST NEWS
அடக்கொடுமையே.. காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி.. ‘ஸ்டேட்டஸ்’ பார்த்து ஸ்பாட்டுக்கே சென்று ஷாக் கொடுத்த கணவன்..! நீதிமன்றம் கொடுத்த அதிரடி நோட்டீஸ்..!!
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவருக்கும், ரேகா என்பவருக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மணீஷ் தனது வேலை நிமித்தமாக பிவானி பகுதிக்குச் சென்று தங்கியிருந்தபோது, சதீஷ் என்ற நபருடன் ரேகாவுக்குப் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் 2025-இல் ரேகா தனது தந்தை மற்றும் சகோதரருடன் சேர்ந்து வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து மணீஷ் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
மனைவியைத் தேடி வந்த மணீஷுக்குப் பேரதிர்ச்சி தரும் வகையில், டிசம்பர் 1, 2025 அன்று அவரது மனைவியின் குடும்பத்தினரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் ஒரு உண்மை தெரியவந்தது. ரேகா தனது காதலன் சதீஷை ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்வது மணீஷுக்குத் தெரியவந்தது. உடனடியாக மணீஷ் தனது வயதான தாய் மற்றும் இரு குழந்தைகளுடன் ராஜஸ்தானில் உள்ள அந்த திருமண மண்டபத்திற்கு விரைந்தார். அங்கு ரேகாவும் சதீஷும் மாலை மாற்றி, தாலி கட்டும் சடங்குகளைச் செய்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ரேகாவின் இந்த சட்டவிரோத இரண்டாவது திருமணத்தை மணீஷ் தட்டிக்கேட்டபோது, சதீஷும் பெண்ணின் வீட்டாரும் மணீஷை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து விரட்டியுள்ளனர். மேலும், ரேகாவின் குடும்பத்தினர் மணீஷை ஏமாற்றி அவரது வீடையும், நிலத்தையும் விற்று பணத்தைப் பறித்துக் கொண்டதால், அவர் தனது குழந்தைகளுடன் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, அதிர்ச்சியில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பிறகு மணீஷ் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த ஹிசார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட மனைவி ரேகா, அவரது காதலன் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, 2026 நவம்பர் 25-க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
