காதலிக்கு மனைவியின் சடலப் படம்..! கொலையை மறைக்க முயன்ற இந்தியப் பொறியாளர்…! அமெரிக்காவில் அம்பலமான கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலிக்கு மனைவியின் சடலப் படம்..! கொலையை மறைக்க முயன்ற இந்தியப் பொறியாளர்…! அமெரிக்காவில் அம்பலமான கொடூரம்..!!

Published

on

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் பெல்லிவ் நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 39 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, தனது மனைவி ரஜிதா சபினேனியை கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பின் குளியலறையில் ரஜிதா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது சந்தேகத்திற்கிடமான மரணம் என்று கருதப்பட்டாலும், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்பது மாதங்கள் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் அவினாஷ் மீது காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

கொலைக்குப் பின் அவினாஷ், தான் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பியபோது மனைவி குளியலறையில் பூட்டப்பட்டிருந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ‘ஸ்மார்ட் லாக்’ மற்றும் பாதுகாப்பு அமைப்பின் பதிவுகளைச் சோதித்தபோது, அவர் குறிப்பிட்ட நேரத்தில் வேறு யாரும் வீட்டிற்குள் நுழையவில்லை என்பது தெரியவந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவினாஷின் மொபைல் போனில் இருந்த பிட்னஸ் செயலியின் தரவுகள் இந்த வழக்கில் மிக முக்கிய ஆதாரமாக மாறின. ரஜிதா இறந்ததாகக் கூறப்பட்ட அதே நேரத்தில், அவினாஷின் இதயத் துடிப்பும் உடல் இயக்கமும் வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக இருந்ததை அந்தச் செயலி துல்லியமாகக் காட்டி அவரைப் போலீசாரிடம் சிக்க வைத்தது.

Advertisement

இவற்றுடன், அவினாஷிற்கு இந்தியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய கள்ளத்தொடர்பு இருந்ததையும் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. கொலை நடந்த நாளன்று அவர் அந்தப் பெண்ணுடன் பலமுறை பேசியுள்ளதோடு, அதற்கு அடுத்த நாள் குளியலறையில் கிடந்த தனது மனைவியின் சடலத்தைப் புகைப்படம் எடுத்து அந்தப் பெண்ணிற்கு அனுப்பியதையும் அவினாஷ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது கிங் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவினாஷ் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அவர் ஜாமீனில் வெளிவர வேண்டுமானால் 2 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in