LATEST NEWS
மெகா ஜாக்பாட்!..மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புகிறதா தங்கம்? நகை வாங்க இதுதான் சரியான நேரம்..நிம்மதி பெருமூச்சு விடும் நடுத்தர மக்கள்!
ஜூன் மாதத்தின் நிலையற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, இந்த ஜூலை மாதம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது நகை வாங்குவோரை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருவதால், நடுத்தர மக்களும் பெண்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கம், கடந்த நான்கு தினங்களில் மட்டும் சவரனுக்கு சுமார் மூவாயிரம் ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது சந்தையில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நேற்றைய தினம் இரண்டு முறை அதிரடியாகக் சரிந்த தங்கம் விலை, இன்றும் தனது இறங்குமுகத்தைத் தொடர்கிறது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 22 காரட் மற்றும் 18 காரட் தங்கம் இரண்டுமே மீண்டும் விலை குறைந்து விற்பனையாகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிராம் 16,000 ரூபாயைத் தொட்டு நடுத்தர மக்களை மிரட்டிய தங்கம், தற்போது படிப்படியாகக் குறைந்து வருவது நகைக்கடைகளில் மக்கள் கூட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதே வேளையில், தங்கம் விலையில் இவ்வளவு மாற்றங்கள் நடந்தாலும், வெள்ளி விலையில் எந்தவித ஏற்ற இறக்கமும் இன்றி பழைய விலையிலேயே நிலையாக நீடிக்கிறது.
