4 மாத கர்ப்பிணி தற்கொலை..!6 வருடம் கழித்து காட்டிக்கொடுத்த DNA ரிப்போர்ட்! கம்பி எண்ணும் காதலன்..! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

4 மாத கர்ப்பிணி தற்கொலை..!6 வருடம் கழித்து காட்டிக்கொடுத்த DNA ரிப்போர்ட்! கம்பி எண்ணும் காதலன்..!

Published

on

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகேயுள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற இளம்பெண்ணும், ராஜ்குமார் என்ற இளைஞரும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஈஸ்வரிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணமான ஒரே நாளில் தனது கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி, மீண்டும் ராஜ்குமாருடன் தனது காதலைத் தொடர்ந்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்வதாக ராஜ்குமார் அளித்த வாக்குறுதியை நம்பி அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், ஈஸ்வரியை திருமணம் செய்ய மறுத்த ராஜ்குமார், திடீரென வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். காதலன் தன்னை ஏமாற்றிய செய்தியை அறிந்த ஈஸ்வரி, மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஈஸ்வரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது அம்பலமானது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்.டி.ஓ விசாரணை மற்றும் டி.என்.ஏ மரபணு பரிசோதனையில், ஈஸ்வரியின் வயிற்றில் இருந்த சிசுவிற்கு ராஜ்குமார் தான் தந்தை என்பது உறுதியானது. இந்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் ஏமாற்றியது ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜ்குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 6 ஆண்டுகள் கழித்து மரபணு சோதனை மூலம் உண்மையான குற்றவாளி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in