LATEST NEWS
தவெக MLA கையில துப்பாக்கிய வச்சிக்கிட்டு என்ன பன்றாரு தெரியுமா..?”: லாரி டயரை சோதிக்கும் கூத்து… திமுக சிவசங்கர் அம்பலப்படுத்திய பகீர் பின்னணி..!
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் திமுக ஆட்சியை விமர்சித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தவெகவைச் சேர்ந்த பெண் ஒருவரே, அக்கட்சியின் எம்.எல்.ஏ சரவணன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிய சிவசங்கர், அந்தப் புகாரை விசாரிப்பதற்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட பெண்ணையே தவெகவிலிருந்து நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார் என்றும் அவர் சாடினார்.
தொடர்ந்து தவெக அரசை விமர்சித்த சிவசங்கர், போலீஸ் பாதுகாப்பு பெற்றுள்ள அந்த தவெக எம்.எல்.ஏ, தன் துப்பாக்கியுடன் லாரி டயர்களைச் சோதனை செய்துகொண்டிருக்கிறார் என்று கேலி செய்துள்ளார். “விஜய்யின் முதுகுதான் கரூர் மக்களின் நினைவுச்சின்னம்” எனக் குறிப்பிட்ட அவர், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை இந்தச் சம்பவம் காட்டுவதாகவும், சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது திமுக ஆட்சியை விமர்சிக்க விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
