LATEST NEWS
“சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம், துறைமுகத்தில் தூள் பக்கோடா” திமுக வச்சி செஞ்சதே… முதலமைச்சர் விஜய்யை மரண கலாய் கலாய்த்த புளூசட்டை மாறன்…!!
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த கால கரூர் விபத்து விவகாரத்தில் திமுக தன் மீது வேண்டுமென்றே பழி சுமத்திப் பலிகாடாக்கியதாகக் குற்றம் சாட்டினார். சட்டசபையில் தம்மைக் குற்றம் சாட்டிப் பேசிய மு.க. ஸ்டாலினுக்குத் தேர்தலின் போது மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், “நான் ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்” என்று திமுகவைச் சாடிப் பேசினார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்றும், மீதமுள்ள 126 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது என்றும் திமுகவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பெரும் தோல்வியடைந்ததை முற்றிலும் மறந்துவிட்டு, தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதையும் பொருட்படுத்தாமல் விஜய் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார் என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக விளாசியுள்ளார். “தவெகவை துறைமுகம் தொகுதியில் தூள் பக்கோடா போட்டு, சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுகதான்; அதைப்பற்றி ஏன் பேச மாட்டீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 234 தொகுதிகளில் 126 இடங்களில் தவெக தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய மாறன், அங்கே மக்கள் தவெகவிற்குப் போட்டதும் கொத்து பரோட்டாதானே என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
